கடந்த சனவரி 22ஆம் நாள் பொறியாளர் திரு. கு.ம. சுப்பிரமணியன், பாவலர் செம்பியன், வழக்கறிஞர் ம. பொன்னிறைவன், எழுத்தாளர் பறம்பை அறிவன், தேமதுரத் தமிழோசை ஆசிரியர் திரு. அறிவாலயன், பொறியாளர் விசுவநாதன், கல்வியாளர் திருத்துவம், பொறியாளர் பழனிச்சாமி, மின்துறைப் பணியாளர் அரசு, முன்னாள் உடற்கல்வி இயக்குநர் திரு. சானகிராமன், தமிழர்களப் பொதுச்செயலாளர் அரிமாவளவன் ஆகியோர் அடங்கிய குழு கொளத்தூர் கொள்ளணை அமையவிருக்கும் இடம் மற்றும் அதன் உத்தேச நீர்ப்பிடிப்புப் பகுதிகள் ஆகியனவற்றைக் கள ஆய்வு செய்தது.
பார்வையிட்டதன் அடிப்படையில் உருவான ஒருமித்தக் கருத்துக்கள்.
1. மேட்டூருக்கு முன்பாக தமிழக எல்லைக்குள் ஓர் அணை கட்டுவது கட்டாயம் இயலும். பாலாறும் காவிரியும் சேர்கிற சுண்டைக்காய் மலைப்பகுதியில் நாம் பரிந்துரைக்கிற அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி ஒக்கனேக்கல் வரை நீளக்கூடும்.
2. தமிழகத்திலுள்ள ஒரு வலுவான ஆட்சியாளரால் இந்தத் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற இயலும்.
3. கொளத்தூர் கொள்ளணை பற்றிய தரவுகள், செய்திகள், அதற்கான தேவை ஆகியன மக்கள் நடுவில் எடுத்துச் செல்லப்பட்டு அதுவே ஓர் மக்கள் இயக்கமாக மாறிட வேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.
பார்வையிட்ட இப் பல்துறை வல்லுனர் குழுவே கொளத்தூர் கொள்ளணை மக்கள் இயக்கப் பொறுப்பாளர்களாக ஒரு மனதாக நியமிக்கப்பட்டனர்.
தலைவர் திரு. அரிமாவளவன்
துணைத் தலைவர்கள்: திரு. கு.ம. சுப்பிரமணியன் மற்றும் திரு. ம. பொன்னிறைவன்
செயலாளர்: திரு. செம்பியன்
பொருளாளர்: திரு. விசுவநாதன்
உறுப்பினர்கள்
திரு. பறம்பை அறிவன்
திரு. சோ. பழனிச்சாமி
திரு. தமிழாலயன்,
திரு. சானகிராமன்
திரு. திருத்துவம்
திரு. அரசு
உடனடிச் செயற்பாடுகளும் அதன் பொறுப்பாளர்களும்
1. நுட்ப அறிக்கை ஒன்றை அணியப்படுத்துவது!
பொறுப்பாளர்கள் திரு. கு.ம. சுப்பிரமணியன், திரு. சோ. பழனிச்சாமி (தேவைப்படின் இன்னும் பிற துறைசார் வல்லுனர்கள்)
அறிக்கை தர வேண்டிய காலக்கெடு: பிப்ரவரி 5ஆம் நாளுக்குள்
2. ஊடகங்கள் வழி பரப்புரை செய்தல்
பொறுப்பாளர்: திரு. அரிமாவளவன்
3. பழ நெடுமாறன் அவர்களைச் சந்தித்து இது குறித்து விளக்குவது
பொறுப்பாளர்: திரு. ம. பொன்னிறைவன்
4. அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்திப்பது
அரிமாவளவன்
வாழ்த்துக்கள். நானும் என்னால் முடிந்தவரை பரப்புவேன். Naan kaanum kanavu palikkumo?
ReplyDelete