எழடா தமிழா! எடுடா கோலை!
சோலை நாட்டை சுடுகாடாக்கிய
வந்தவர் வடுகர் வாலை நறுக்க
ஏழைத் தமிழர் ஏற்றம் பெற்றிட
எடடா கோலை! எடடா கோலை!!
எழடா தமிழா! எழடா தமிழா!!
திராவிடம் என்ற பேரில் கடந்த 60 ஆண்டு காலமாக தமிழர் நாட்டை ஆண்டு இந்த மண்ணையும் மக்களையும் வந்தேறிகளின் வேட்டைக்காடாக ஆக்கிவிட்டார்கள்! மண்ணையும் வளங்களையும் ஆற்றுநீரையும் அடுத்தவனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு தமிழினத்தையே இருளில் மூழ்கடித்துவிட்டனர்! “இனி என்ன செய்வது?” என்று இப்போது தமிழினம் விழிபிதுங்கிக் கிடக்கிறது! ஈழத் தமிழர்கள் 3 லட்சம் பேரைப் பலிகொடுத்தும் ஈழத்திற்கு விடிவு இல்லை! தமிழ்நாட்டுத் தமிழராகிய நாமோ மெது நஞ்சு ஊட்டப்பட்டு முடங்கிக் கிடக்கிறோம். காவிரி இல்லை! கடனாறு இல்லை! கருப்பாநதி இல்லை! பொருநை இல்லை! பெரியாறு இல்லை! பாலாறு இல்லை! அங்கே எஞ்சிக் கிடந்த மணலும் இல்லை! 534 மீனவர்கள் செத்தும் தீர்வு இல்லை! கர்நாடகத்தில் இருக்கும் பெங்களூரு குடிநீர்த் திட்டமும் தமிழ்நாட்டின் ஒக்கனேக்கல் திட்டமும் ஒரு ஒப்பந்தத்தின் இரு கூறுகள்! ஆனால் முன்னது நடந்தது! பின்னது முடங்கியது!! வந்தேறிகள் நாட்டை பிடித்து வைத்துக் கொண்டு வளங்களை அறுவடை செய்து அவனவன் நாட்டிற்கும் வீட்டிற்கும் சேர்க்கிறான்! ஆனால், உனக்கு அவன் சாராயக்கடை நடத்துகிறான்! உனக்கு சன் டிவி, கலைஞர் டிவி, செயா டிவி நடத்துகிறான்! புளுத்த அரிசியைக் கொடுத்துவிட்டு மற்றபொருட்களின் விலைவாசிகளை விண்ணைத் தொட வைத்திருக்கிறான்! சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பேரில் வளமான தமிழ்நிலங்களை மேலும் பல வந்தேறி நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுக்கிறான்! மழைக் காலத்திலும் மின்வெட்டு! உன்னைச் சாதிக்குள் குறுக்கி இட ஒதுக்கீடு என்று பிச்சைக்கார அரசியலுக்குள் தள்ளுகிறான்! மண்ணுரிமை, ஆட்சியுரிமை, நாட்டுரிமை பற்றிப் பேசாதே என்கிறான்!
இனி என்ன செய்வது? இப்படிப் புலம்பிப் புலம்பி நொந்து நூலாவதில் பயனில்லை! திராவிடத்தையும் திராவிடச் சாயலில் வரும் அத்தனை இயக்கங்களையும் கட்சிகளையும் முற்றாக முழுதாகப் புறந்தள்ளுவோம்! ஆக்கபூர்வச் செயல்களில் இறங்குவோம்! தேவைப்படும்போது அதிரடியாயும் களம் இறங்குவோம்!
“கொளத்தூர் கொள்ளணை” என்று இங்கே நாங்கள் முன்மொழிந்திருப்பது அழுத்தமான ஓர் அடியெடுப்பு. ஒவ்வொரு களத்திலும் இனி இதுபோன்றவை முளைக்கும், வெடிக்கும்! ஆழப் படியுங்கள்! படித்ததைப் பரப்புங்கள்! நாடு நம்முடையாது! காடே பற்றி எரியும்போது மரங்கள் மட்டும் என்று சிரித்துக் கொண்டா இருக்கும்! நாடே அழியும்போது தனி ஆட்களும் குடும்பங்களும் தப்பித்துவிடும் என்று கனா காணாதீர்கள்! பம்மாதே, பதுங்காதே, படுக்காதே, சோர்வுறாதே, சோரம்போய்விடாதே! எழு, விழி, பரப்பு! எட்டிப்பார்.... விடுதலை அண்மித்திருக்கிறது!
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே!
கொளத்தூர் கொள்ளணை வந்ததென்று
ஆடுவோமே பள்ளு பாடுவோமே!
காவிரி மீண்டும் சலசலக்கும்!
நாடு மீண்டும் கலகலக்கும்!
அரிமாவளவன்
தமிழர்களம்
தமிழர்நாடு
arimavalavan@hotmail.com
arimavalavan@hotmail.com















பதிவு பெற்ற அமைப்பாக்கி, போதுமான முயற்சிகளினால் அரசை அணுக வேண்டும்.
ReplyDeleteஅதேசமயம் இதற்கு மக்களின் ஆதரவைப்பெற பிரச்சாரம் அவசியம்.
இதற்கு நன்கொடைகளாக பொருள்வளம் வரவேண்டும்.
வரும் தலைமுறைக்கு நாம் செய்ய வேண்டியது இதுதான்
வெற்றிபெற வாழ்த்துகிறேன்
ayya itharkaana muyarchiyil enathu pangum kandippagairukum
ReplyDeleteதண்ணீர் தன்னிறைவு பெற இதுபோன்ற முயற்சிகளை அரசாங்கம் கண்டிப்பாக பரிசீலனை செய்து நிறைவேற்றி பார்க்கவேண்டும். ஒரு பைசா பயனில்லாத சேது சமுத்திர திட்டம் போன்றவற்றிற்கு செலவு செய்யும் தொகையை இதுமாதிரி சிறந்த, மண் பயன்பெறும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்
ReplyDeleteநன்று... நல்ல முயற்சி. காவிரி பிரச்சனைக்கு தங்களின் இந்த தீர்வு நிச்சயம் வரவேற்க தக்கது. இதை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். இத்த
ReplyDeleteபதிவை அப்படியே அச்சு பிரதி எடுத்து அணை கட்டப்பட உள்ள இடத்தின் மாவட்ட ஆட்சியரிடம் சிபாரிசு செய்யுங்கள். அவரை மாநில அரசுக்கு பரிந்துரை செய்ய சொல்லுங்கள். ஒரு மாவட்டத்தின் அணைகள் குறித்து முடிவு எடுக்க அந்த மாவட்ட ஆட்சியருக்கு(மாவட்ட நிதிபதி) கூடுதல் அதிகாரங்கள் உள்ளன. மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையை மாநில அரசு சட்டமன்றத்தில் விவாதித்து ஆய்வுக்குழுவுக்கு அனுப்பியாக வேண்டும்.
முயற்சி செய்யுங்கள். பாராட்டுக்கள். என்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்கிறேன்.
நன்றி.